சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 12 பேருக்கு சென்னையை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 27, 2026 அன்று ரத்து செய்து, உடனே அவர்கள் சரணடைய உத்தரவிட்டது.
இதையடுத்து, . ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பிரதீப், ஹரிஹரன், விக்னேஷ், சிவா, முகிலன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொலை வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 14 பேருக்கு ஜாமின் வழங்கியது. 14 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அஞ்சலை, மலர்கொடியை தவிர்த்து மற்ற 12 பேரின் ஜாமினை ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.