எர்ணாகுளம்: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு, மொத்தம் 4 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘டிவென்டி20’ என்ற பெயருடைய அந்த அமைப்பு, கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் அமைப்பாகும்.

அந்த அமைப்பு எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கம்பலம், மழுவனூர், ஐக்காரநாடு மற்றும் குன்னத்துனாட் ஆகிய கிராமப் பஞ்சாயத்துக்களை கைப்பற்றியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற மாநில உள்ளாட்சித் தேர்தலில், கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் உள்ள மொத்தம் 19 வார்டுகளில் 18 வார்டுகளில் வென்று ஆச்சர்யமூட்டி, அந்தப் பஞ்சாயத்தையேக் கைப்பற்றியது.

ஆனால், தற்போதைய தேர்தலில், அதனோடு சேர்த்து, கூடுதலாக 3 பஞ்சாயத்துக்களை கைப்பற்றி ஆச்சர்யமூட்டியுள்ளது.

அரசியல் சாராத ஒரு கார்ப்பரேட் அமைப்பின் இந்த வெற்றியானது, கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றுள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.