பாகுபலி, பாக்மதி படத்துக்கு பிறகு இரண்டு வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்தபிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் நிசப்தம்.
இதில் அனுஷ்கா, மாதவன் இணைந்து நடித்திருகின்றார். காது கேளாத வாய் பேசாத மாற்று திறனாளியாக அனுஷ்கா வேடம் ஏற்றிருக்கிறார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடித்துள் ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். நான்கு இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது.


அனுஷ்கா, மாதவன் படம் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள் ளார். கோபி சுந்தர் இசையமைத்திருக் கிறார்.
தியேட்டரில் வெளியிட படக் குழு காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பு பற்றிய விவரம் இதுவரை தெரி யவில்லை. மற்ற சில படங்கள்போல் இப்படமும் ஒடிடி தளத்தில் வெளியிட பேசப்பட்டு வந்தது. ரகசியமாக விற்பனை பற்றி நடந்துவந்த பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. பிரபல ஒடிடி நிறுவனம் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறதாம். சீக்கிரமே அதுபற்றிய அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.