சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் இல்லம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல ஊழல் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையில் புகார்களில் சிக்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தது.   அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு அமைச்சர் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை நடத்தி உள்ளனர்.  இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ரொக்கம், நகை எனப் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இந்த சோதனை மேலும் மேலும் தொடர்ந்து வருகிறது.

தற்போது அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இல்லம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கே பி அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இந்த சோதனை நடந்து வருகிறது.