கோவை

திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து பல முக்கிய ஆவணங்களும் ரூ.13 லட்சமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது ஊழல் செய்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.  இன்று காலை முதல் அந்தப் புகாரின் பேரில் எஸ்.பி வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட சோதனை இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த சோதனை சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனையில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருங்கியவர்களுக்கு எஸ்.பி வேலுமணி கொடுத்ததும், ஒரே ஐ.பி முகவரியில் இருந்து ஏராளமான ஒப்பந்தப்புள்ளிகள் எடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளன. மேலும் இந்த சோதனையில் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலிருந்து ரூ.13.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தவிர இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத்தொகை ஆவணமும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பான ஆவணங்கள், நில பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டக சாவியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.