மும்பை: மும்பையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரசால், மற்ற நகரங்களை காட்டிலும், மும்பை நகரில் அதிகபட்ச மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதன் பின்னர் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் தொற்றின் தீவிரம் குறைந்தது.

ஆனாலும் சில நாள்களாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்று, தற்போது மும்பையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியதாவது:

மும்பை ரயில்களில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து பயணிப்பது கிடையாது. ஆகையால் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பது என்பது  மக்கள் கையில் தான் உள்ளது. லாக்டவுன் அமல்படுத்தாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் முன் எச்சரிக்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.