கோரக்பூர்:

ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலா 63 குழந்தைகள் இறந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மரணமடைந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனை.  இங்கு பணம் கட்டாததால் . கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியோடு ஆக்சிஜன் சப்ளை  நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளையை நிறுத்தியது.

இதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 63 குழந்தைகள் பலியாகின. இது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

முதல்வர் யோகியோ, “மூளை வீக்கத்தால் குழந்தைகள் மரணமடைந்தன” என்று தெரிவித்தார்

மாநில மருத்துவ கல்வி அமைச்சர் அசுதோஸ் டாண்டன்,” ஆக்சிஜன் சப்ளை பிரச்னை காரணமாக யாரும் இறக்கவில்லை. சம்பவம் குறித்து கோரக்பூர் கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கும் இதையே குறிப்பிட்டார். மேலும்,  “கடந்த 9ம் தேதி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் புகார் அளவிக்கவில்லை “ என்றார்.

இந்த நிலையில் அதே மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மரணமடந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.