எடப்பாடிக்கு எதிர்ப்பு! கூவத்தூரில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. எஸ்கேப்!

Must read

சென்னை:

சிகலா தரப்பினரால் சென்னை கூவத்தூர் நட்டத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் இன்னொருவரும் வெளியேறியிருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவப்பு வழக்கில் சிறை சென்றதால், அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி,  சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். இன்று அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கவேண்டும்.

இந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே சசிகலா (எடப்பாடி) ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தங்கள் உறவினர் இறந்தததற்குக்கூட இரு எம்.எல்.ஏக்கள் வீட்டுக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில் மதுரை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  அங்கிருந்து வெளியேறினார். குண்டர்கள் பலர் அங்கே கண்காணித்துக்கொண்டிருப்பதாகவும், தான் மாறுவேடத்தில் தப்பியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமாரும் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேறினார்..

மேலும் அவர், “வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டேன்” என்று அவர் தெரிவிததுள்ளார். மேலும் அவர், “எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை. கோவை மாநகர அதிமுக  செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article