சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன இன்று வந்தடைந்தன. இதன் காரணமாக மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு செலுத்த போதுமான அளவில் தடுப்பூசி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இதுவரை 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று மாலைக்குள் போடப்பட்டு விட்டன. இதனால், இன்று முதல் தடுப்பூசி போட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால்,  36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறையால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள 10ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இன்று சென்னையில் போடப்பட்டு விடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மேலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.  பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், ஐ தராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது.  அதைத்தொடர்ந்து,  மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன.
இந்த தடுப்பூசிகள் நந்தனத்தில் உள்ள குளிரூட்டும் கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து  மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.