இவர் யார் என்றுத் தெரிகின்றதா ?

இவர் தான் இந்தியாவின் முதல் பெண் சுரங்க பொறியாளர். பெங்களூரு சுரங்க ரயில் திட்டத்தில் 4.8 கிலோமீட்டர் தூரம் சுரங்கம் அமைத்தவர்.

பெங்களூரு மெட்ரோ திட்டத்தில் பணியாற்றிய இந்தியாவின் ஒரே பெண் சுரங்கப் பொறியாளர்
அன்னி சின்ஹா ராய், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் சுரங்கப்பாதை பொறியாளர். இவர் பெங்களூரு மெட்ரோ திட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
வட கொல்கத்தாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சார்ந்தவரான அன்னி, நாக்பூர் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்த பிறகு ஒரு முதுகலை பட்டப்படிப்பு படிக்க  வேண்டும் என்று விரும்பினார். எனினும், அவரது தந்தை காலமானதால் அவரது கனவு சிதைந்தது. தனது குடும்பத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க அவர்  சென்போ என்கிற தில்லி மெட்ரோவுடனான ஒரு ஒப்பந்ததாரர் நிறுவனத்திடம் 2007ல் வேலைக்குச் சேர்ந்தார்.
அவரது முதல் நாள் வேலை அன்று அவரை யாரோ பார்வையாளர் என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் சுரங்கப்பாதை பொறியாளரை அவர்கள் பார்பது அதுவே முதல் முறை.
ஒரு சுரங்கப்பாதை பொறியாளராக தனது முதல் அனுபவங்களை அவர் நினைவு கூர்ந்தார், “சில மணி நேரத்தில், நான் தரையை உடைக்க வேண்டிய ஒரு பெரிய இயந்திரத்தின் முன் நின்று கொண்டிருந்தேன் ஆனால் அது எங்கோ சிக்கியிருந்தது. ஒரு ஜெர்மன் பொறியாளரும் என் முதலாளியும் என்னை அதனுள்ளே சென்று ஒரு நட்டைத் திறக்குமாறு கோரினர். நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்வதற்கு முன், என் முகம் நீரியல் எண்ணெயில் மூடப்பட்டிருந்தது. என் சகாக்கள், வாழ்நாள் முழுவதும் என் முகம் பளிச்சென்று ஒளிரும் என்று கூறினார்கள். இன்று சுரங்கப்பாதை குடைவு தான் என் வாழ்க்கை.”
2009ல் சென்னை மெட்ரோ பணியை ஏற்றுக்கொண்ட பின்னர், 2014ல் ஆறு மாதங்களுக்கு அவர் தோஹா சென்றார். 2015 இல் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (BMRC) துணை மேலாளராக பணியாற்றத் தொடங்கினார். அன்னி நம்ம பெங்களூர்  மெட்ரோவிற்காக 4.8 கி.மீ. கிழக்கு-மேற்கு நிலத்தடி பாதையை உருவாக்க உதவியுள்ளார். இது தான் தென்னிந்தியாவின் முதல் நிலத்தடி மெட்ரோ தடம். இது கப்பன் சாலை முதல் விதான சௌதா வரை இயங்கும் .
BMRC இல், அன்னி  தனிமனிதராக கோதாவரி என்ற சுரங்கப்பாதை குடையும் இயந்திரத்தை பயன்படுத்தி சமீபத்தில் சாம்பிக் சாலை முதல் மெஜஸ்டிக் வரை நிலத்தடி பாதையை செதுக்கினார்.
அதற்குப் பின், அன்னி ஒவ்வொரு நாளும் சுரங்கப்பாதையில் எட்டு மணி நேரம் செலவழிக்க தொடங்கினார்.
“சில நேரங்களில் மக்கள் என்னை ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுடன் பார்ககும் போது, நான் “நம்ம மெட்ரோ”விற்காக வேலை செய்கிறேன் என்று தெரியவரும் போது, அவர்கள் வேலை எப்போது முடியும் என்று மட்டுமே கேட்பார்கள்,” என்று அன்னி கூறினார்.

அனைத்து பெண்களுக்கும் அவர் என்ன அறிவுரை கூற நினைக்கிறார் என்று நாம் அவரைக் கேட்டபோது, “ விரைவில் சுரங்கப்பாதை குடையும் இயந்திரத்தை பெண்கள் இயக்க வேண்டும். மேலும் பல பெண்கள் சுரங்கத்தில் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறினார்.