சென்னை

மிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என அண்ணாமலை கூறி உள்ளார்.

இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில் தமிழக கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. இந்நிகழ்வு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திரளப் பக்தர்கள் இதைக் கண்டு களித்தனர்.

அதையொட்டி அண்ணாமலை செய்தியாளர்களிடம்.

” அயோத்தியில் நடந்த குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை எடுத்துரைத்திருக்கிறது. திமுகவினர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

பக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றால், அனுமதி வாங்கி வாருங்கள் என்கிறார்கள்.மேலும் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டைக்கு அனுமதி வேண்டுமென்கிறார்கள். ஆனால் அனுமதி கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். 

அதை எழுத்துபூர்வமாக கேட்டால், வாய்மொழியாகத் தான் கூறுவோம் என்கிறார்கள். இந்து அறநிலையத்துறை என்பது தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை ஆகும். ஆகவே வரும் 2026-ல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது”

என்று தெரிவித்துள்ளார்.