திருச்சி
சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் நகரில் சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மொத்தம் 50000 பேர் மட்டுமே வந்ததாகவும் பல இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் இன்று திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அண்ணாமலை அந்த பேட்டியில்.
”சேலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமைத்துப்போன மிக்சர் என்பதால் அதை யாரும் சாப்பிட முடியாது. பாஜக தமிழகத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து மீட்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளது.
எங்களின் நோக்கம். ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது ஆகும். இதுவரை வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. எனவே சமூக நீதி குறித்துப் பேச திமுகவிற்குத் தகுதி இல்லை.
இனி இந்தியாவைப் பொறுத்தவரை ஒற்றைக் கட்சியான பாஜகதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.”
என்று கூறியுள்ளார்.