சென்னை

மிழக அரசுக்கு பத்திரப்பதிவுத்துறை மூலம் ஒரே நாளில் ரு163.84 கோடி வருவாய் வந்துள்ளது

தமிழகத்தில் தை மாதம் தொடங்கியது முதலே பல புதிய தொடக்கங்களைச் செய்வது வழக்கமான ஒன்றாகும்.  குறிப்பாக நிலம், வீடு போன்ற சொத்துக்களை தை மாதம் பிறந்த உடன் வாங்கலாம் எனத் தள்ளிப் போடுவதால் தற்போது தை மாத பிறந்த பிறகு பலரும் சொத்துக்களை வாங்க தொடங்கி உள்ளனர்.

இன்று தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை ஒரு அறிக்கையை  வெளியிட்டுள்ளது..

அந்த அறிக்கையில் ,

”தை பொங்கலுக்குப் பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024  வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 

புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன் மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது” 

என்று கூறப்பட்டுள்ளது.