சென்னை

ளுநர் பங்கேற்ற விழாவுக்கு வந்த மாணவர்களுக்கு மட்டுமே  வருகை பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. 

இன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த விழாவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர். ஆளுநர் விழாவுக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இது குறித்து,

”நாங்கள் மாணவர்கள் வருகை குறித்துப் பதிவு செய்யவில்லை. ஆனால் அப்படிச் சொன்னால் மட்டுமே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று அவ்வாறு சொல்லியிருந்தோம்.  இந்த சுற்றறிக்கை மாணவர்கள் நாட்டுப்பற்றைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வெளியிடப்பட்டது” 

என்று தெரிவித்தார்.