வெளியானது ’அண்ணாத்த’ ட்ரைலர்…..!

Must read

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். “விஸ்வாசம்” படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைப் பார்த்துவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். இதனால், படத்தின் வெளியீடு தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன. விரைவில் ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளது படக்குழு.

படத்தின் டீசர், நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

More articles

Latest article