சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இந்தக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக நாளை (ஜூலை 14) மேற்கு வங்கத்துக்கு பயணிக்கவுள்ளார் ரஜினி.மேற்கு வங்க படப்பிடிப்பில் ரஜினியின் காட்சிகளை 4 நாட்கள் படமாக்கவுள்ளது படக்குழு.
மேற்கு வங்க படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.