சென்னை: நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்த வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இதுதான் என, அந்த காரின் படத்தை வெளியிட்டு, நடிகை கஸ்தூரி கலாய்த்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்திருந்தார். ரூ 8 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இந்த காருக்கு,  சுமார் 1.6 கோடி நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்த விஜய், கோர்ட்டில் வரிவிதிப்புக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயை கடுமையா விமர்சித்ததுடன்,  வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 1லட்சம் அபராதமும் விதித்து, வரியை கட்ட உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து,  நடிகை கஸ்தூரி, விஜய்யின் வெளிநாட்டு காரின் படத்தை வெளியிட்டு, அதனுடன்,  விஜய் வழக்கில் கோர்ட் கூறிய தீர்ப்பினை மேற்கோள்காட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் பதிவில், இன்று தலைப்பு செய்தியில் வந்த நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட் இதுதான் என சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளார். இந்த டிவிட் வைரலாகி வருகிறது.