அண்ணா 50வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

Must read

சென்னை:

பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, பல இடங்களில் அவரது படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து திமுக, அதிமுகவினர் உள்பட பல கட்சிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா நினைவிடத் தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

More articles

Latest article