பிக்பாஸ் அனிதா சம்பத், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். விமல் ஹீரோவாக நடிக்கும் குடும்ப கதையம்சம் மற்றும் அண்ணன் – தங்கை சென்டிமென்டை மையமாக கொண்ட திரைப்படத்தில் அனிதா சம்பத் நடிக்க இருக்கிறார்.

டைரக்டர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவில், காட்வின் இசையமைப்பில், வத்சன் வீரமணி மற்றும் மார்ட்டின் நிர்மல் குமார் ஆகிய இருவரின் திரைக்கதையில் தயாராகி வரும் இந்த படத்தை உதய் புரோடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், காமெடி நடிகர் பாலசரவணன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.