சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை  அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் மற்றும் பணமோசடி வழக்கு அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீதும்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவர்மீதான சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிற்து.

இந்த வழக்கின் விசாரணையை எதிர்த்து, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த உச்சநீதி மன்றம், ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விதித்த தடையை  மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன்,  அமலாக்கத்துறை விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிடலாம் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.