சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஏஞ்சலினா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ‘ஏஞ்சலினா’ படம் இயக்கத் தொடங்கினார். ‘கென்னடி கிளப்’ படத்திற்காக இப்படம் பாதியிலேயே நின்றது.

மீண்டும் ‘ஏஞ்சலினா’ படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு, ஜூன் வெளியீடு என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இமான் இசையமைக்க இப்படத்துக்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆறாம் திணை தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.