ஆண்ட்ரியா பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்….!

Must read


சமூக ஊடகங்களில் நடிகர் நடிகைகள் தற்போது ஆவலாக உபயோகித்து வருகின்றனர் .மில்லியன் கணக்கான ரசிகர்களை அவர்களை பின்தொடர்கிறார்கள் .
சமூக ஊடகங்களைப் பின்தொடர்வதன் மூலம் பிரபலங்களைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை என்று ஆண்ட்ரியா (Andrea Jeremiah) கூறுகிறார்.


தனது ரசிகர்களுக்குத் தெரியாத 3 விஷயங்களை ஆண்ட்ரியா (Andrea Jeremiah) தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .
தன் வீட்டில் வளரும் மூன்று செல்லப்பிராணிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah).

முதல் நபரின் பெயர் பெக்கி. அம்மாவின் பாசக்கூட்டத்தில் சமீபத்தில் சேர்ந்தது. அம்மாவின் செல்லம். பெக்கி அதிகம் உற்சாகம் கொண்டது. அதை போட்டோ எடுக்கவே முடியாது. துள்ளிக் குதிக்கும். சிறிய சிவப்பு பந்தை கேட்ச் பிடித்து விளையாடு பெக்கிக்கு ரொம்பப் பிடிக்கும்.

அடுத்த நபர் ரிங்கோ. இசைக்கலைஞர் ரிங்கோ ஸ்டாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தது. பெக்கியிடமிருந்து சிவப்புப் பந்தை பறித்துச் செல்வதுதான் அதற்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

மூன்றாவது நபர் ராக்கோ. இவர் ரொம்பவும் சீனியர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக வந்தது. குறட்டை விடுவதில் அப்பாவுக்கும் அதுக்கும் ஒரு போட்டியே வைக்கலாம்.

More articles

Latest article