டில்லி

ந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி தலைமையிலான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட குஜராத், கோவா, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில்  உள்நாட்டுத் துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ஆந்திராவின் கங்காவரம் துறைமுகத்தின் 31.5 சதவீத பங்குகளை சுமார் ரூ.2000 கோடிக்கு அதானி நிறுவனம் வாங்கியது.  ஆந்திர அரசிடம் இத்துறைமுகத்தில் மீதமுள்ள பங்கில் 10.4 சதவீத பங்குகள்  உள்ளன

இந்த பங்குகளையும் வாங்க அதானி  நிறுவனம் முடிவு செய்தது.  அதானி நிறுவனம் ஆந்திர அரசிடமிருந்து 10.4 சதவீத பங்குகளை வாங்க இந்திய தொழிற்போட்டி ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது.

தற்போது மீதமுள்ள 58.1 சதவீத பங்குகளை டிவிஎஸ் ராஜூ குழுமம் வைத்துள்ளது. துறைமுகத் தொழிலில் டிவிஎஸ் ராஜூ குடும்பம் பெரிதாக ஆர்வம் காட்டாததால், ஒட்டுமொத்த துறைமுக நிர்வாகமும் அதானி கட்டுப்பாட்டிற்குச் செல்வது  தவிர்க்க முடியாத ஒன்று எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.