தெலுங்கு, இந்தி படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தது.. தமிழ் படப்பிடிப்பு எப்போது?

Must read

கொரோனா வைரஸ் பரவலலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 70 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. திரையுலகில் பெரும்பாலான பணிகள் முடங்கியிருக்கிறது.
சமீபத்தில்தான் போஸ்ட்புரொடக்‌ஷன் மற்றும் டிவி படப்பிடிப்புக்கு அனுமதி யை அரசு வழங்கியது. சினிமா படப்பிடிப்பு தொடங்கவும் அனுமதி தர வேண்டும் என்று எல்லா துறையினரும் கேட்டு வருகின்றனர்.


பாலிவுட், டோலிவுட்டில் அதாவது இந்தி மற்றும் தெலுங்கு பட உலகில் படப்பிடிப் புக்கு நிபந்தனைகளுடன் அம்மாநில அரசுகள் அனுமதி அளித்திருகின்றன. சிரஞ்சீவி தலைமையில் நாகார்ஜூனா, எஸ் எஸ். ராஜமவுலி, தில் ராஜு உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விசாகப்பட்டிணம் பகுதிகளில் படப் பிடிப்பு நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு அவர் ஜூலை 15ம் தேதிமுதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கி னார். மேலும் விசாகப்பட்டிணத்தில் சினிமா ஸ்டுடியோ கட்டவும் நடிகர் , நடிகைகள் போன்றவர்கள் வீடுகள் கட்டிக்கொள்ள வும் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த வாரம் சிரஞ்சீவி தலைமையில் நாகார்ஜூனா, எஸ் எஸ். ராஜமவுலி,தில் ராஜு உள்ளிட்ட குழுவினர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் படப்பிடிப்புகள் நடத்த அரசிடம் திரையுலகினர் வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது என திரையுலகினர் முணுமுணுக்கின் றனர்.

More articles

Latest article