டில்லி :

ஆந்திர மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி  அம்மாநில எம்பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

லோக்சபா பகல் 12 மணி வரையும், ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது  பகுதி மார்ச் 5ம் தேதி முதல் துவங்கி, வரும்  ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்றம் இந்த சீசன் துவங்கியது அமளி தொடர்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய நீரவ் மோடி விவகாரம், ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்பிகளின் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிகள் போராட்டம் என நாடாளுமன்றத்தில் அமளி தொடர்கிறது.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தெலுங்குதேசம் கட்சி வெளியேறியுள்ளது. ஆந்திர எம்பிகள் இன்று லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா 12 மணி வரையும், ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.