ங்களகிரி

ந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 36 மணி நேர உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கி உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபி நேற்று முன் தினம் குண்டூரில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அரசு குறித்து கடுமையாக விமர்சித்தர்.  இது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆத்திரத்தை மூட்டி உள்ளது.   அன்று இரவு பட்டாபி இல்லம் மற்றும் மாநிலம் எங்கும் உள்ள தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களை அவர்கள் சூறையாடினர்.

இந்த கலவரத்தில் பல நிர்வாகிகள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  இதையொட்டி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்  மற்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து ஆறுதல் அளித்துக் கதவடைப்புக்கு அழைப்பு விடுத்தார்.    காவல்துறையின் சந்திரபாபு மற்றும் அவர் கட்சி நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.  சந்திரபாபு மற்றும் அவர் மகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய சந்திரபாபு இன்று காலை 8 மணி முதல் மங்களகிரியில் சூறையாடப்பட்ட தனது அலுவலகத்தில் 36 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.  அவர், “இதற்கு முன்பு ஆந்திராவில் அமைதியான ஆட்சி நடந்தது. ஜெகன்மோகன் முதல்வரானதால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.  தவறுகளைச் சுட்டிக் காட்டினால் தாக்குதல் நடக்கிறது” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “கடந்த இரண்டரை ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய் எஸ் ஆர் கட்சியினரைப் பற்றி கலவரத்தைத் தூண்டும் வகையில் தகாத வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.  எனவே கோபம் கொண்ட எங்கள் கட்சியினர் தாக்குதல் நடத்துகின்றனர்.  இந்த விளைவுகளுக்கு சந்திரபாபு நாயுடுவே முழு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.