தராபாத்

ந்திர முதல்வரின் சகோதரி ஒய் எஸ் சர்மிளா தெலுங்கானா  மாநிலச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவை வாக்குகள் பிரிவதைத் தவிர்ப்பதற்காக எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர் தெலுங்கான சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.