ஐதராபாத்:

நாடு முழுவதும் வெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநில அரசு ரூ.25 வெங்காயம் விற்பனை செய்வதாக அறிவித்தது

இதனால், வெங்காயம் விற்பனை செய்வதற்கு முன்பே, விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்த விசியநகரம் என்ற  இடத்தில்  ஏராளமானோர் குவிந்ததால், அந்த இடத்தின் கேட் மூடப்பட்டு, பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, அந்த கேட் திறக்கப்பட்டதும், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டும், வெங்காயம் வாங்க ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் பலர் சிக்கி காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கீழே உள்ள படத்தில் கூட்டத்தினர் முதியவர் ஒருவரை தள்ளி விட்டு விட்டு, ஆவேசமாக வெங்காயம் வாங்க ஓடுகிறார்கள், அதுபோல பல பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த நிலையில், ஒருபுறம் அதை கண்டுகொள்ளாமல், பலர் வெங்காயம் வாங்க ஓடுவதும், மற்றொருபுறம் கீழே விழுந்தவர்களை சில பெண்கள் காப்பாற்ற முயற்சிக்கும் நிகழ்வுகளையும் காணும்போது, வெங்காயம் விலை மட்டும் கண்ணீரை வரவழைக்க வில்லை.. மக்களின் மாண்டுபோன மனிதாபிமானதும் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது….