டெல்லி:

பொருளாதார மந்த நிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நான் இருந்த இடத்தில் நீங்கள் கொஞ்ச காலம் இருந்து பாருங்க… உ.பி.பீகார், சத்திஷ்கர், ஒடிசா மாநிலங்களின் தற்போதைய நிலமை உங்களுக்குத் தெரிய வரும் என்று கடுமையாக சாடி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நேற்று ஜாமினில் விடுதலையானார். அப்போது, செய்தியாளர் களிடம் பேசியவர், தன்மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் இதுவரை சிபிஐ, அமலாக்கத்துறையினரால் சுமத்த முடியவில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

106 நாட்களுக்கு பிறகு நான் உங்களை சந்திக்கிறேன். 75 லட்சம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்றும்,  நமது சுதந்திரத்திற்காக போராட வேண்டியுள்ளது என்றார்.

என்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நான் கருத்து கூறுவது இல்லை என்றவர், தான் அமைச்சராக இருந்த போது எனது செயல்பாடுகளில் எந்த குற்றமும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார்.

மோடி தலைமையிலான அரசுக்கு பொருளாதாரத்திற்கு வழி தெரியாததால், தவறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை பா.ஜ., அரசால் யூகிக்க முடியவில்லை. பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் ஆகியவைகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தற்போதைய பொருளாதார நிலையி 5.5 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தவர், ஏற்கனவே இருந்த 8 ல் இருந்து 5.5 ஆக குறைந்துள்ளதை பார்க்கும்போது, மோடி அரசு  பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக உள்ளது என்பதை தெளிவாகி உள்ளது.

பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசுவது இல்லை. நல்ல நாள் வரும் என வாக்குறுதி அளித்த பாஜ. தற்போது இந்த மோசமான  நிலையை ஏற்படுத்தியுள்ளது.உற்பத்தி, சிறுகுறு தொழில், கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறுவதும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கிராமப்புறங்களில் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. பொருட்களின் மொத்த விலையும் உயர்ந்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது வருவாய் ஈட்டும் சக்தி குறைவு. மின் தேவை குறைவு காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் தெளிவற்ற நிலையே பொருளாதார மந்தநிலைக்கு காரணம். பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்றும், நான் இருந்த இடத்தில் நீங்கள் கொஞ்ச காலம் இருந்து பாருங்க… உ.பி.பீகார், சத்திஷ்கர், ஒடிசா மாநிலங்களின் தற்போதைய நிலமை உங்களுக்குத் தெரிய வரும்

இவ்வாறு அவர் கூறினார்.PC