திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் விஷால் அண்ணனின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்துள்ள படம் “அண்டாவ காணோம்”.

வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் தற்போது தள்ளிப்போயுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் JSK சதிஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். விரைவில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.