சத்யஜோதி பிலிம்ஸ் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது. அன்பறிவு என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடிப்பதுடன், படத்தின் கதையை எழுதி, இசையமைக்கவும் செய்கிறார். அஸ்வின் ராம் படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், எடிட்டிங் பிரதீப் ராகவ்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.