தமிழில் ட்வீட் செய்து அசத்திய மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா…

Must read

741 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஆனந்த் மஹிந்திரா-வின் உருவப்படத்தை ஓவியர் கணேஷ் வரைந்துள்ளார்.

அவரின் இந்த கலைத்திறமையைப் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா அந்த ஓவியத்தை தன் வீட்டில் வைக்க விருப்பப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழி, வட்டெழுத்து, இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள மொத்தம் 741 தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்.

ஏற்கனவே இவர் திருவள்ளுவரின் படத்தை வரைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பாராட்டைப் பெற்றவர்.

தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவப்படத்தை வரைந்து அவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா தமிழில் ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article