கதாநாயகி ஆசை காட்டி துணை நடிகை பலாத்காரம்

சென்னை

தாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி துணை நடிகை ஒருவரை மூன்று ஏர் பலாத்காரம் செய்துள்ளனர்.

சென்னை

சென்னையில் போரூரில் உள்ள சக்திநகர் 3 ஆவது குறுக்குத் தெருவில் ஒரு துணை நடிகை வசித்து வருகிறார்.   இவருக்கு கதாநாயகியாக நடிக்க மிகவும் ஆர்வம் உள்ளதால் அதற்கான வாய்ப்புக்களை தேடி வருகிறார்.   குமார் என்பவர் இவருடன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.    அவர் தாம் ஒரு தயாரிப்பாளரிடம் பணி புரிவதாகவும் கதாநாயகி வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறி உள்ளார்.

ஒருநாள் நடிகைக்கு போன் செய்து, “தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளார். அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார்.  நீங்கள்  போரூர் சிக்னல் அருகில் வரவும்.  நாங்கள் உங்களை காரில் அழைத்துச் செல்கிறோம்” என குமார் கூறி உள்ளார்.  அதை நம்பிய அந்த பெண் அங்கு வந்து காரில் ஏறிச் சென்றுள்ளார்.  அவரை குன்றத்தூரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குமாரைப் பின் தொடர்ந்து மேலும் இருவர் வந்துள்ளனர்.  மூவருமாக அந்த நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.   அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.   நடிகை வைத்திருந்து மொபைல், பணம், போட்டிருந்த நகை ஆகியவைகளையும் பறித்துக் கொண்டுள்ளனர்.   இது பற்றி வெளியே சொன்னால் இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகும் என மிரட்டி உள்ளனர்.

ஆயினும் அந்த நடிகை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   நடிகையின் மொபைலுக்கு வந்த எண்,  அவர் கூறிய அடையாளம், மற்றும் காரின் பதிவெண் ஆகியவைகளைக் கொண்டு காவல்துறையினர் மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags: An extra actress was raped by 3