மும்பை: மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் 4 முறை நிலநடுக்கம் பதிவானது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட், பூஜ் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில் மக்கள் அச்சம் அடைந்தனர். அதேபோன்று ஜம்முகாஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பைக்கு வடக்கே 103 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

காலை 11:51 மணியளவில் 2.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் குறைவான அதிர்வு கொண்டது என்பதால் சேதங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது