அதிமுகவை மீட்டெடுக்கும் ஒரே கட்சி அமமுக தான்: பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் பேச்சு

Must read

தேனி: அதிமுகவை மீட்டெடுக்கும் ஒரே கட்சி அமமுக தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம் தான். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று தேனியும் எனது சொந்த மாவட்டம் தான்.

தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பண மூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டிய ஒரே கட்சி அமமுக தான். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை வழங்க அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

More articles

Latest article