சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளர். ஏற்கனவே சசிகலாவும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக முக்குலத்தோர் ஜாதியை மட்டுமே  கொண்டதாக மாறி வருகிறது.

சசிகலாவை எதிர்த்து அதிமுகவை உடைத்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவுடன் இணைந்து, துணைமுதல்வராக பதவி வகித்து ஆட்சி அதிகாரங்களை அனுபவித்து வந்தார். ஆனால், கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், மீண்டும் தலைமைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து,   அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து,   நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்,.இதனையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர் களை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்தும் வருகிறார். விரைவில் ஓபிஎஸ்ம் தனது ஆதரவாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் தேனிக்கு வந்த டிடிவி தினகரனை தேனி மாவட்ட எல்லையில் வரவேற்றார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் டிடிவி தினகரன் அணியோடு இணைந்து செயல்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆங்கி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டிடிவி தினகரன்,  எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்றும் அவருடன் கை கோர்க்க மாட்டேன் என்றவர், எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்று  கூறினார்.  அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவராக எடப்பாடி இருப்பதாக குற்றச்சாட்டியவர். ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி என்றும்,  நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என கூறினார். நா

நாடாளுமன்ற தேர்தலில் எங்களை மதிக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என தெரிவித்த டிடிவி தினகரன், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதே அதிமுக-அமமுக  ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க ஒரு சிலர் விரும்பியதாகவும், ஆனால்,. அப்போது  எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தினாலும் தான் ஏற்க தயார் என தெரிவித்ததாக தான் கூறியதால், இணைந்து செயலாற்ற முடியாத நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.