சென்னை:

ம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிகளை அறிவித்து உள்ளது தமிழகஅரசு. அதன்படி,  பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறை கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் வகுக்கப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.   இதில் பல்வேறு தரப்பினர் வயது வரம்பு அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.  அதை ஏற்று சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று முன்பிருந்த விதி தளர்த்தப்பட்டு உள்ளது.

அதிகபட்ச வயது  45 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது.

பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் பெண்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வரும் பெண்களின் (திட்ட பயனாளிகள்) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

இதே நிலைக்கு உள்படும், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களும் திட்ட பயனாளிகளாக முடியும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு புதிய அரசாணையில் தெரிவித்து உள்ளது.