அம்மா தி.மு.க.!: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து உருவாகிறது புதிய கட்சி

Must read


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய சகோதரர் இனியன் சம்பத். இவர் 1989ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தார்.  பிறகு, தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவக்கினார். அடுத்து,து, பழ. நெடுமாறன் கட்சியான தமிழர் தேசிய முன்னணியுடன் இணைந்தார். அங்கிருந்து பிரிந்து தமிழ் தேசிய கட்சி என்ற கட்சியை துவங்கினார்.
பிறகு கடந்த ஜூன் 28ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார்.
இந்நிலையில், இனியன் சம்பத், அ.தி.மு.க.வில் இருந்து விலகி, ‘அம்மா திமுக’’ கட்சியை துவக்க இருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெறவுள்ளாதாக  தகவல் வெளியாகி உள்ளது.
 

More articles

Latest article