ஜி.எஸ்.டி. விளம்பர தூதர் அமிதாப் பச்சன்

டெல்லி:

ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தேசம், ஒரே வரி என்ற அடிப்படையை கொண்டு ஜி.எஸ்.டி. ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல் படுத்தப்படுகிறது.

இதன்படி ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பான அம்சங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக 40 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சி எடுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.


English Summary
amithab bacchan appointed as ambassador for gst