டெல்லி:

கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு பதில் 7 வீரர்கள் விளையாடுவது போல் இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ். தனோ கூறி உள்ளார்.

இந்திய விமானப் படையில் வீரர்கள் பற்றாகுறையால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தலைமை மார்ஷல் பி.எஸ். தனோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தச் சூழ்நிலையில் கிரிக்கெட் அணியில் 11 வீரர்களுக்கு பதிலாக 7 வீரர்கள் விளையாடுவது போல் உள்ளது. 2 நாட்டு எல்லை பாதுகாப்பில் குறைந்தபட்சம் 42 வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சைனா எல்லை பாதுகாப்பில் 32 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சவாலான சூழ்நிலையில் பணியாற்றுகிறோம்’’ என்றார்.

காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்சினையில் விமான படையை பயன்படுத்தும் வாய்ப்பு அரசுக்கு இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக விமானப் படையைப் பயன்படுத்துவது அரசின் விருப்பம். எங்கள் படை எப்போதும் தயாராக உள்ளது’’ என்றார்.