ஹிந்தி திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனது அட்டகாசமான நடிப்பாலும், தனித்துவமான ஸ்டைலாலும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் அமிதாப்பச்சன் இந்த வயதிலும் பல இளம் நட்சத்திரங்களுக்கு ‘டப்’ கொடுத்துவருகிறார்.

பெரியத்திரை, சின்னத்திரை, விளம்பரம் என்று சகலத்திலும் நிறைந்திருக்கும் அமிதாப் எல்லா துறையிலும் தன்னுடைய ஆளுமையை நிரூபித்தவர்.

1969 ம் ஆண்டு வெளியான ‘சாத் ஹிந்துஸ்தானி’ படத்தில் கோவா செல்லும் 7 இளைஞர்களில் ஒருவராக அறிமுகமானவர் அமிதாப்பச்சன்.

53 ஆண்டுகளாக பாலிவுட்டில் மட்டுமன்றி இந்தியாவின் முக்கிய ஆளுமையாக வலம்வரும் அமிதாப்பச்சன் 1942 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர்.

 

சவுதாகர், தீவார், ஷோலே ஆகிய படங்களில் துடிப்பான இளைஞனாக அமிதாப்பின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது, குறிப்பாக பெண்களை மிகவும் கவர்ந்தது.

2000 ம் ஆண்டில் ‘கோன் பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அமிதாப் இதுவரை கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘குட்பை’, ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கிய அமிதாப் தனது முதல் படமான சாத் ஹிந்துஸ்தானி-க்காக 5000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக அவரே கூறியிருக்கிறார்.

‘கோன் பனேகா குரோர்பதி’ சீசன் 1ல் ஒவ்வொரு எபிசோடுக்கும் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் சீசனுக்கு சீசன் தனது சம்பளத்தை உயர்த்தி தற்போது ஒரு எபிசோடுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

1984 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வான அமிதாப் உத்தர பிரதேச அரசியலிலும் முக்கிய நபராக சிலகாலம் இருந்தார்.

அதன்பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பச்சன் தற்போது கைவசம் நான்கு ஐந்து படங்களை வைத்துள்ளார்.

[youtube-feed feed=1]