வாஷிங்டன்:
திடீரென ஏற்படும் 500 டாலர் மதிப்பிலான செலவை 57 சதவீத அமெரிக்கர்களால் சமாளிக்க முடியாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேங்ரேட் என்ற அமைப்பு அமெரிக்காவில் ஒரு சர்வே மேற்கொண்டது. அதில், ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எதிர்பாராத வகையில் திடீரென 500 டாலர் செலவு ஏற்பட்டால் அதை எத்தனை பேர் எப்படி சமாளிப்பார்கள் என சர்வேயை நடத்தியது. இதில் 57 சதவீத அமெரிக்கர்கள் இந்த செலவை சமாளிக்க கூடிய வகையில் தங்களிடம் நிதி ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆயிரத்து 3 அமெரிக்கர்களிடம் நேர்கானல் நடந்தது.


10 அமெரிக்கர்கள் இந்த செலவை சமாளிக்க தங்களிடம் சேமிப்பு இருப்பதாக தெரிவித்தனர். 21 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு மூலம் சமாளிப்போம் என தெரிவித்தனர். 20 சதவீதம் பேர் இதர செலவுகளை குறைத்து சமாளிப்போம் என்றனர். 11 சதவீதம் பேர் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் பெறுவோம் என தெரிவித்தனர்.

இது கடந்த 2016ம் ஆண்டில் 63 சதவீதம் பேர் என்று இருந்த நிலையில் இருந்து தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாக வெளியில் தோன்றுகிறது. ஆனால் இன்னும் இதற்கு அதிக தொலைவு இருப்பதாகவே இந்த சர்வே முடிவு காட்டுகிறது. பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு 7 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் வசிப்பவர்களின் அடிப்படை தேவைக்கான நிதி ஆதாரம் எப்படி இருக்கிறது என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. ஒபாமா அதிபரான பிறகு தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. சம்பளம் மிக தாமதாக மேல் எழுந்து கொண்டிருக்கிறது.
எனினும் கடந்த 1999ம் ஆண்டு ஈட்டிய வருவாயை விட தற்போது 2.4 சதவீதம் குறைவாக வருவாய் ஈட்டுவதாக அங்கு குடியிருப்போர் தெரிவித்துள்ளனர்.
வீட்டு செலவு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு செலவு டாலர் மதிப்பு வீக்கத்தை வேகமாக உயர்ந்துள்ளது.

இது குடும்பத்தினரின் பட்ஜெட்டை வெகுவாக பாதித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு கார், ஒரு வீடு அல்லது அபார்ட்மென்ட், ஒரு செல்ல பிராணி அல்லது குழந்தை இருந்தாலே இந்த திடீர் செலவும் கண்டிப்பாக நேரிடும். இவை இருந்தாலே தாமாக மனித பந்தயத்தில் இடம்பெற்றாக வேண்டும் என்று ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் ஜில் கார்ன்பீல்டு தெரிவித்துள்ளார்.
செலவை குறைக்க வெளியில் உணவு சாப்பிடுவதை வாடிக்கையாளர்கள் நிறுத்துவது தான் முதல் பணியாக இருக்கிறது. 10ல் 6 பேர் வெளியில் சாப்பிடுவதை குறைத்துவிட்டனர். செலவை குறைக்க தொலைதொடர்பில் கம்பியில்லா சேவைகளை ரத்து செய்துள்ளனர். கடந்தாண்டு பெடரல் ரிசர்வ் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 ஆயிரத்து 600 பேரிடம கருத்து கேட்டதில் 46 சதவீதம் பேர் தங்களது குடும்ப பட்ஜெட்டில் திடீரென ஏற்படும் 400 டாலர் செலவை சமாளிப்பது சவாலானது என்று தெரிவித்துள்ளனர்.