‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் அமீர்…!

Must read

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக ஜாக்கி பணிபுரிகிறார்.

விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் 200 கோடிவரை வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையானால் சூர்யா, வெற்றிமாறன் இருவரது திரைவாழ்க்கையிலும் அதிக பட்ஜெட் படமாக வாடிவாசல் இருக்கும்.

இந்நிலையில், வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்த அமீர், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

More articles

Latest article