திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது.

இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.

1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.