‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ படங்களை தொடர்ந்து 3-வது முறையாக போயபதி சீனு – பாலகிருஷ்ணா கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
இது பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 106-வது படமாகும்.
துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.