மும்பை: கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பான பணிகளை செய்த, ‘எங்களை தற்கொலை செய்ய அனுமதியுங்கள்’ என  281 டாக்டர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கும், இழிவான முறையில் நடத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில்,  தங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர, நாங்கள் தற்கொலை செய்வதற்கு அனுமதி தாருங்கள் என 281 ஆயுர்வேத மருத்துவர்கள் (BAMS)  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில், அலோபதி மருத்துவத்துக்கு ஈடாக சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, நேச்சுரோபதி போன்ற ஆயுஷ் மருந்துங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன.  கடந்த வரும் தொற்று பரவல் காலக்கட்டத்தின்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவர்களின் பணி சிறப்பாக நடைபெற்றது.

அப்போது, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்திற்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு, பழங்குடிப் பகுதிகளில் பணிபுரியும் இந்த 281 ஆயுர்வேத மருத்துவர்களுக்கு  ரூ .40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால், அவர்கள் தற்போதுவரை 24,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநில அரசு வழங்கிய வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்ற வில்லை. இது தொடர்பாக பலமுறை நினைவுபடுத்தியும், தாக்கரே அரசு கண்டுகெள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என்று கடிதம் எழுதி உள்ளனர். மேலும்,  கோவிட் -19 தொற்றுநோய்களின் போது சாதகமற்ற சூழ்நிலையில் எங்களது கடின உழைப்பைப் பெற்ற அரசு, தற்போது எங்கள்மீது  பிறகும் அவர்கள் மீது எந்த மனிதநேயத்தையும் காட்டவில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்கொலைக்கு மருத்துவர்கள் அனுமதி கேட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.