பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு கூறியிருக்கிறது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசை அச்சுறுத்த மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு ஏவி வருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.

மேலும், பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் மார்ச் 10 ம் தேதி வெளியாகும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பின் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

2024 ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்க இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.