டில்லி

முன்னாள் மக்களவை உறுப்பினரும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

 

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக சுஷ்மிதா தேவ் பதவி வகித்து வந்தார்.  இவர் மேற்கு வங்க மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் மோகன் தேவ் மகள் ஆவார்.  சந்தோஷ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.   சுஷ்மிதா வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் ஆவார்.

கடந்த 2011 முதல் 2014 வரை சுஷ்மிதா தேவ் அசாம் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.  கடந்த 2014 முதல் 2019 வரை மக்களவை உருப்பினர் ஆக பதவி வகித்துள்ளார்.  சுமார் 49 வயதாகும் இவர் கடந்த 2017 முதல் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  அவர் சோனியா காந்திக்கு எழுதி உள்ள விலகல் கடிதத்தில் இதைத் தெரிவித்ததோடு தமக்குக் கடந்த 30 வருடங்களாக ஒத்துழைப்பு அளித்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளோர்.