அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் டெல்லியில் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் திறக்கப்படுகிறது.

தற்போது நெ. 24 அக்பர் ரோட்டில் இயங்கி வரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

9 கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள ‘இந்திரா பவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலக கட்டிடம் இந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி இந்திரா காந்தி பிறந்த தினத்தின் போது திறக்கப்படுவதாக இருந்தது. பணிகள் முடியாததால் இதன் திறப்பு விழா தள்ளிபோனது.

45 ஆண்டுகளாக இயங்கி வந்த அக்பர் ரோட் தலைமை அலுவலகம் காங்கிரஸ் கட்சியின் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள நிலையில் ஜனவரி முதல் புதிய கட்டிடத்திற்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.