சென்னை
தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் 20 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 4862 பேர் பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,60,449 ஆகி உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,377 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், உள்ளிட்டவை முழுவதுமாக மூடப்படுகிறது. மழலையர் பள்ளி, 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் ஆகியவையும் மூடப்படுகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகளுடன் பள்ளிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]